தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்கியுள்ள படம் லவ் ஸ்டோரி. ரேவந்த் என்ற பாத்திரத்தில் நாக சைதன்யாவும், மவுனிகா என்ற பாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களும் டீசரும் போஸ்டரும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக சாரங்க தரியா பாடல் தெலுங்கு ரசிகர்களை தாண்டி இந்தியா முழுவதும் ஹிட்டடித்தது.
இந்த பாட்டில் சாய் பல்லவி நடனம் பெரியளவில் பேசப்பட்டது. இந்நிலையில் கொரோணா காரணமாக தள்ளிப்போன இந்த படத்தின் வெளியீடு தற்போது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை வருகிற செப்டெம்பர் மாதம் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்கில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை படத்தின் ஹீரோ நாக சைதன்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.