ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சார்பில் சென்னை கோபாலபுரம் கீதா பவன் திருமண மண்டபத்தில் 54 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருப்பதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சனை பற்றி கவலையில்லை என்றும் கூறினார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.