திமுக சார்பாக நடந்த பிரசாரத்திற்காக மணப்பாறையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் திமுக கொடிக்கு பதிலாக அதிமுக கொடி இருந்தது வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரசாரத்திற்காக உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை வரவேற்று மணப்பாறையை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் பேனர் வைத்திருந்தார். அவ்வாறு வைக்கப்பட்டிருந்த பேனரில் திமுக கொடிக்கு பதிலாக அதிமுக கொடியை பயன்படுத்தியிருப்பதை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.