Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பெரிய ஆலமரம்….! அருவாளோடு வரும் அதிமுக… செம பொடுபோட்ட அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஸ்டிக்கர் ஒட்டக்கூடிய இந்த கலாச்சாரம் என்பது அதிமுக  ஆட்சியில், அதிமுகவாலே உருவாக்கப்பட்டது. விருதுநகர் மருத்துவ கல்லூரியும் திமுக கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துக் கல்லூரி தான் என்பதை நான் அவர்களுடைய கவனத்துக்கு கொண்டுவர  விரும்புகின்றேன்.

எனவே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது நீங்கள் பெற்ற  பிள்ளைகளை, நீங்கள் பேணி பாதுகாத்து இருக்க வேண்டும். நீங்கள் பெத்த பிள்ளைக்கு பெயர் வைத்தீர்கள் ஒளிய, சோறு வச்சியிங்களா ? என்றுதான் நாங்கள் கேட்க விரும்புகின்றேன்.

எனவே உங்களுடைய திட்டங்களில் எங்களுடைய புகழை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒருபோதும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு பெரிய ஆலமரம். ஆனால் அதிமுக என்பது ஒரு காந்தாரி மரமாக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

திராவிட முன்னேற்ற கழகம் அதனுடைய சின்னமே உதயசூரியன். எனவே திமுக, திமுக ஆட்சி, திமுக திட்டங்கள் என்பதெல்லாம் கோடி சூரியன்.  அதற்கு வெளிச்சம் பிற இடத்திலிருந்து தேவையில்லை. எனவே திமுக கோடி சூரிய ஒளிக்கு சமம். அதனுடைய ஒளி வேறு சில உதிரி நட்சத்திரங்களுக்கு தேவைப்படுமே தவிர திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்,

திமுக அரசின் திட்டங்களுக்கும் வேறு எந்த விளம்பர வெளிச்சமுமோ, வேறு வெளிச்சமோ எங்களுக்கு தேவை இல்லை. எனவே விதைக்கிற நேரத்திலே வெளியூர் போய்விட்டு, அறுக்கின்ற நேரத்தில் நாங்கள் தான் இருக்கிறோம் என்று அருவாளை தூக்கி கொண்டு வரக்கூடிய இந்த செயலை அதிமுக கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |