Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகரை “திருடன்” என அறிவிக்க கோரி போராட்டம் …!!

நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த திமுக பிரமுகரை திருடன் என தமிழக அரசு அறிவிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான கேடிசி நகர் அருகே 126 ஏக்கர் நிலத்தை சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஒருவர் அபகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை அபகரித்த திமுக பிரமுகரை திருடன் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இந்து மக்கள் கட்சியினர் 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் முன்பு  இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Categories

Tech |