Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகை….!!

கும்பகோணம் அருகே கோவில் ஒன்றை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில பாரத ஹிந்து சேனா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கும்பகோணம் அருகே குடிதாங்கி பகுதியில் 50 ஆண்டுகளான பழமையான மாணிக்க நாச்சியார் திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை அப்பகுதி மக்கள் மற்றும் அகில பாரத இந்து சேனா சார்பில், சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜா கோவில் நிலம் தனக்கு சொந்தம் எனக்கூறி பிரச்சனையில் ஈடுபட்டார்.

இவர் மீதும் பொதுமக்கள் சுவாமிமலை காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இருப்பினும் இதுகுறித்து காவல்துறையினர் உரிய விசாரணை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை அகில பாரத இந்து சேனா நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் சாமிமலை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Categories

Tech |