திமுக தேர்தல் அறிக்கை குறித்து நேற்று விமர்சித்து பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், ஹிந்தியில் சொல்லுவாங்க…. திமுக அறிக்கை ”சூட்” பொய்யான தேர்தல் அறிக்கை. ஆட்சிக்கு வந்த பிறகு அவங்க ”லுட்” பண்றதுதான் வாடிக்கையாக வச்சிருக்காங்க. திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றுகின்ற தேர்தல் அறிக்கையாக இருக்கிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். இன்றை வரை அதைப் பற்றி எந்த ஒரு பதிலும் கிடையாது. ஆனா அதெல்லாம் மறந்துட்டு, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் கொள்ளை அடிப்பதில் கவனம் செலுத்துகின்றார்கள். அதே போல கட்டப்பஞ்சாயத்து செய்வது, நில அபகரிப்பு.
நில அபகரிப்பு என்பது தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில ஒரு மிக இரண்ட காலமாக இருந்தது. நிலம் வைத்துக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் பயந்து கொண்டிருந்த சூழ்நிலை இருந்தது. திமுக காரங்கள் மேலேயும், முக்கியமான தலைவர்கள் மேலயும் கேஸ் இருக்கு. திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கட்டப்பஞ்சாயத்து தலைவிரித்தாடும்.
ஊழல் தலைவிரித்தாடும், நிலங்கள் அபகரிக்கப்படும் என மக்கள் பயத்துடன் இருக்கிறார்கள். ஆகையால் பொதுமக்கள் திராவிட முன்னேற்ற கழகம் என்னென்ன பொய்யான தேர்தல் அறிக்கை விட்டாலும் கூட மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்தார்.