Categories
மாநில செய்திகள்

“திமுக ஆட்சி நிர்வாகம் திறமையற்ற அரசு”….. எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு….!!!!

சேலம் மாவட்ட எடப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.95 கோடி மதிப்பில் 24 முடிவற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்ட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்றதால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசு திட்டத்தை துரிதமாக செயல்படுத்தவில்லை. இந்த திட்டத்தினை நிறைவேற்றி இருந்தால் தற்போது மேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளுக்கு நிரப்பி இருக்க முடியும். விவசாயிகளின் நலனுக்காக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை பற்றி முழுமையான விவரங்கள் அறியாமல் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் பொறியாளர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.

இதனையடுத்து திமுகவின் இந்த நடவடிக்கை விவசாயிகள் மீது அக்கறை இன்மையை காட்டுகிறது. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில் இருந்து நிர்வாக திறமையற்ற அரசாகவே செயல்பட்டு வருகிறது. இதனால் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. அரசும் காவல்துறையும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டது. இதனால் தற்கொலைகள், போதைப்பொருள் பழக்கமும் அதிகரிக்கவிட்டது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பலர் உயிர்களை இழக்க நேரிடுகிறது. இதனையடுத்து மின்சார சட்ட திருத்த மசோதா நடந்து முடிந்த கதை. அது பற்றி இப்போது பேசி பலன் இல்லை. ஆனால் கொரோனா பேரிடரால் வருவாய் என்று மக்கள் தவித்து வந்த சூழலில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகவே மக்களுக்கு பெருஞ்சுமையை ஏற்படுத்தி உள்ளது. இந்த காலகட்டத்தில் இது போன்ற சுமையை தவிர்க்க வேண்டும். இதனை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை தொடர்ந்து நாடி வருகிறார். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் வரை அது குறித்து பேசுவது முறையல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |