தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டு நாட்களாக துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று அதில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தெய்வங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். அப்போது குளித்தலை, ரத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடத்த அரசு ஆவண செய்யுமா என எம்எல்ஏ மாணிக்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, ரூ.1.25 கோடியில் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தொழில் துறை அனுமதி பெற்று விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Categories
“திமுக ஆட்சியில் தெய்வங்கள் எல்லாம் மகிழ்ச்சி”….. அமைச்சர் சேகர்பாபு அதிரடி…!!!!
