தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடி பக்தர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசானது பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனை தொடர்ந்து இதை கண்டித்து மாநிலம் முழுவதும் 12 முக்கிய இடங்களிலுள்ள கோவில்களின் அருகே பாஜகவானது ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தியது
இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன் பாஜகவினர், அனைத்து நாட்களிலும் கோவிலைத் திறக்க அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மதுரையை சேர்ந்த பாஜகவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் மத்திய முன்னாள் மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “திமுக அரசு மக்களின் உரிமையை பறித்து வருகின்றது. இந்நிலையில் கோவில்களில் வழிபாடு நடத்துவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை ஆகும் என்று அரசியலைப்பு உரிமையை வழங்கியுள்ளது. எனவே இத்தகைய உரிமையை பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.