Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசின் மெத்தனத்தை கண்டித்து… நவம்பர் 9ம் தேதி அதிமுக போராட்டம்… ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி தண்ணீர் தேக்கப்படாமல், கேரளாவின் நிர்பந்தம் காரணமாக கொண்டு நீர் இருப்பை குறைத்து இருக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நவம்பர் 9ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் அறிவித்துள்ளன. இது தொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு ஐந்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருவதால் தான் அங்கு விவசாயம் செழித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்படும் தண்ணீர் தமிழ் நாட்டின் பொருளாதாரத்திற்கு காரணமாக விளங்குகிறது. அம்மா ஆட்சியின் பொழுது அவர் மேற்கொண்ட முயற்சியால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 142 அடி அளவுக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம் என தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்திருந்தது. இந்நிலையில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன குடிநீர் தேவைகளை கருத்தில் கொள்ளாமல் மாநில  உரிமைகளுக்காக போராடுவதில் மெத்தனமாக செயல்படும் திமுக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து நவம்பர் 9ஆம் தேதி காலை 11 மணிக்கு மேற்கூறிய ஐந்து மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன போராட்டங்கள் நடைபெறும்” என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |