தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
தமிழகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கின் கீழ் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை தற்போது அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதில் 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.