Categories
மாநில செய்திகள்

திமுக அமைச்சர்களிடையே வெடித்த மோதல்…. புதிய பரபரப்பு…!!!!!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று நேற்றைய தினம் நிதி அமைச்சர் பி டி ஆர் கூறி இருந்தார். கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள், தவறுகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேசன் கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை என புகார்கள் வருகின்றது. நிதி அமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என பி டி ஆர் கூறி இருந்தார்.

இந்நிலையில் இது பற்றி பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, நான் 50 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். மக்களும் முதல்வரும் திருப்தி அடைந்தால் போதும். ரேஷன் கடையை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை என ஆவேசமாக கூறினார். இதனால் திமுகவிற்குள் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |