Categories
மாநில செய்திகள்

திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு…. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 4 ஆம் தேதி தமிழகத்தில் மறைமுக தேர்தலும் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பல இடங்களில் தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது.

எனினும் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் வந்தது. இதனால்  தற்போது 15 தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியை சேர்ந்த 8 அதிமுக, 7 திமுக கவுன்சிலர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரி பாலசுப்பிரமணி புகாரின்படி போத்தனூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில், 15 அதிமுக, திமுக கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |