செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு முழுவதும் பொங்கல் தொகுப்பை தரமற்ற நிலையில் கொடுத்திருக்கிறார்கள். இந்த பொங்கல் தொகுப்பு கொடுப்பதில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருக்கிறது. முழுமையான பொருள் கிடைக்கல, தரமான பொருள் கிடைக்கல, எடை சரி இல்ல. இது எல்லாம் ஊடகத்தில் வெளிவரவில்லை, இதுகுறித்து விவாதமும் நடக்கல.
விவாத மேடையில் விவாதிக்கவும் இல்லை. ஆனால் அண்ணா திமுக ஆளுகின்ற பொழுதும் எங்களைப் பற்றி விமர்சனம் செய்தீர்கள், எதிர்கட்சியாக இருக்கும் போதும் விமர்சனம் செய்வீங்க. ஆனா இவ்வளவு பெரிய முறைகேடு தமிழ்நாட்டில் நடந்து இருக்கு, இதுகுறித்து எந்த தொலைக்காட்சியிலும் விவாத மேடையில் விவாதிக்கவில்லை இது வருந்தத்தக்கது.
முழுக்க முழுக்க ஊடகமும், பத்திரிகையும் தான் இந்த அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.ஆனால் வலைத்தளங்களில் இன்று வைரலாகப் பரவி வருகிறது. எங்கெங்கெல்லாம் இப்படி முறைகேடு நடந்ததோ, அதெல்லாம் யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மிகப்பெரிய இந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு கொடுத்ததில் முறைகேடு நடந்திருக்கிறது, ஊழல் நடந்திருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் இன்றைக்கு நாம் பார்க்க முடிகின்றது என தெரிவித்தார்.