திமுக தேர்தல் அறிகையில் சொல்வதை செய்து என்பது என்னுடைய வாதம் என தமிழக பாஜக தலைவர் உறுதியாக கூறியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை குறித்து நேற்று கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், திராவிட முன்னேற்ற கழகம் கொள்ளை அடிக்கும். நில அபகரிப்பு யாரு மேல இருந்தது ? 2ஏக்கர் நிலம் கொடுக்குறேனு சொன்னது திமுக. நிலம் கொடுக்கவில்லை, அதற்க்கு பதிலாக நிலங்களை அபகரித்தார்கள். அதுதான் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஒரே எண்ணமாக இருக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையானது, பொய்யும், புரட்டுமானது. மக்களை ஏமாற்ற கூடிய தேர்தல் அறிக்கையாக இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் சொன்னதா செய்தார்களா ? திமுகவினுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லுவது ஒன்றாக இருக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அத்தனையும் மறந்து விட்டு, கொள்ளையடிப்பதில் மட்டும் தான் அவர்கள் குறியாக இருப்பார்கள்.
திமுக பெண்களுக்கு 1000ரூபாய் அறிவித்ததும், அதனை செயல்படுத்துவதற்கு சத்தியம் இல்லை என்று சொன்னீங்க. இப்போ அதிமுக 1,500 கொடுப்போம் என சொல்லி இருக்கீங்க என்ற கேள்விக்கு, அதிமுக செயல்படுத்துவதற்கான சாத்தியதோடு சொல்லி இருக்கின்றார்கள். 2,500 ரூபாய் பொங்கலுக்கு கொடுத்தது அதிமுக. திமுக சொல்லுவாங்க, ஆனால் செய்ய மாட்டார்கள் என்பதுதான் என்னுடைய வாதம். அதிமுக சொன்னது சாத்தியமான ஓன்று தான் என தெரிவித்தார்.