சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு ராமதாபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பாஜக கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அந்த சமயத்தில் பொன். பாலகணபதி சசிகலா புஷ்பாவிடம் அத்துமீறும் ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை பார்த்து பாஜக கட்சியினரை பலரும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது அதை பொய் என்று கூறி காயத்ரி ரகுமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சசிகலா புஷ்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரும்போது இரு நபர்களுக்கு இடையில் அவர் புடவை மாட்டிக் கொண்ட போது அதை பொன். பாலகணபதி விடுவித்து அவருக்கு உதவுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் திமுகவின் பார்வை எப்போதும் குஜால்கள் தான். அவர்களால் எதையுமே சரியாக பார்க்க முடியாது. மூளை அத்தகையது என்றும் பதிவிட்டுள்ளார்.
திமுகவின் பார்வை எப்போதும் குஜால்கள்தான். அவர்களால் எதையும் சரியாக பார்க்க முடியாது. மூளை அத்தகையது. pic.twitter.com/G2kJAyD03k
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) September 14, 2022