ஆளுங்கட்சியான திமுகவை விமர்சனம் செய்வதில் எதிர்க்கட்சியான அதிமுகவை மிஞ்சி விட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் அவர் இதுவரை எந்த கட்சியும் காட்டாத அளவில் வன்மத்தை காட்டி வருவதாக கூறப்படும் நிலையில் அதை மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், திமுக தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அநாகரிகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்களே.
திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் ஏராளமான ஊழல் செய்துள்ளது. காங்கிரசுக்கு ஒரு 2ஜி போல், திமுகவுக்கு ஒரு எனர்ஜி நிறுவனமான பிஜிஆர் என பட்டியல் போட்டு வைத்துள்ளோம். சரியான காலம் வரும்போது இந்த ஊழல் பட்டியலை வெளியிடுவோம். அப்போது திமுகவின் அஸ்திவாரமே ஆட்டம் காணும் என்று தெரிவித்துள்ளார்.