Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவால் இதை செய்யவே முடியாது”…. ஈபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகி விட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர், காவல் நிலையத்தில் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆட்சியில் லாக்கப் மரணங்கள் தொடர்கதை ஆகி வருவதை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியா அரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்று சென்னையில் லாக்கப் காவலில் இருந்த ராஜசேகர் என்ற கைதி திடீரென மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

Categories

Tech |