Categories
உலக செய்திகள்

திபெத்தில் பனிப்பாறைகள் உருகுவதால்…..ஏற்படும் விளைவு….அச்சத்தில் மக்கள்….!!!!

சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. இது சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும்  அமைந்துள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. மேலும் இது உலகத்தின் கூரை என்று  போற்றப்படுகின்றது.

திபெத்திலிருந்து பிரம்மபுத்திரா, கங்கை உள்ளிட்ட நதிகள் உற்பத்தியாகின்றன. இந்த நதிகளை நம்பி, சுமார் ஒன்றரை பில்லியன் மக்கள் ஆசிய கண்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பருவநிலை மாற்றம், காடுகளை அழித்தல், கனிம வளங்களை அதிக அளவில் வெட்டி எடுத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் அங்குள்ள பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதால், இவற்றில் உள்ள மக்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இந்த பனிப்பாறைகள் உருகுவதால்,  தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |