Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் 5 முந்திரி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..?

முந்திரிப்பருப்பு தினமும் சாப்பிட்ட வந்தால் நம் உடலில் மிக நல்ல மாற்றத்தை பெறலாம், அதுமட்டுமில்லாமல் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்றும் பார்ப்போம்..

பாயாசம், கேசரி, பொங்கல் போன்ற உணவுகளில் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவருக்கு மட்டுமே தெரியும். முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கும் என்பது கூட பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

கொல்லாம் பழம் அல்லது முந்திரி பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது. முந்திரிப்பருப்பு அதிக கொழுப்பு நிறைந்தது என பலரும் ஒதுக்கி விடுவது உண்டு. ஆனால் முந்திரியில் இருக்கக்கூடிய கொழுப்புகள் நம் உடல்நலத்திற்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்புகள் இதில் அடங்கியிருக்கிறது.

இதைத்தவிர 100 கிராம் முந்திரியில் 550 கலோரிகள் தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும், நார்ச்சத்து, பாஸ்பரஸ்,வைட்டமின் பி தொகுதிகளும், கால்சியம், குரோமியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

இவ்வளவு சத்துக்கள் கொண்ட இந்த முந்திரிப்பருப்பை தினமும் சாப்பிட்டுவர கிடைக்கக் கூடிய நன்மைகள்..!

எலும்புகளை வலிமையாக்கும்:

எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு மெக்னீசியமும் முக்கியமான சத்து. இது முந்திரிப் பருப்பில் நல்ல அளவில் இருக்கிறது. எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கிறது.

மெக்னீசியம் இதன் மூலமாக எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க உதவி செய்கிறது. தினமும் 4 முதல் 5 முந்திரிப் பருப்புகளை சாப்பிட்டுவர எலும்புகள் வலுவாகும் மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளும் தவிர்க்கப்படும்.

 ரத்த அழுத்தம் சீராக இருக்கும்:

அதிக ரத்த அழுத்தம் ஏற்படக்கூடியவர்கள்  எப்பொழுதும் வேலை என பதட்டமான மனநிலையில் இருப்பவர்கள், தினமும் இந்த முந்திரிப் பருப்பை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமில்லாமல் நல்ல சீரான மனநிலை பெறுவதற்கும் உதவி செய்கிறது.

மூளையின் ஆரோக்கியம்:

மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான பால்சேஸ் மற்றும்  கொழுப்பு அமிலங்கள் முந்திரியில் நிறைந்திருக்கின்றது. இது மூளையில் புதிய செல்கள் உற்பத்தியாக்கும். மூளையில் அழுத்தம் சீராக இருப்பதற்கும், ஆக்ஸிஜனேற்றம் சீராக இருப்பதற்கும், மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு, தேவையான ரசாயன சுரப்பதற்கும் உதவி செய்கிறது.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முந்திரியில் இருக்கக்கூடிய காப்பர் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான நொதிகளை சுரக்க செய்கிறது. குறிப்பாக பெருங்குடல் அலர்ஜி, பெருங்குடலில் புற்றுநோய் வராமலும் தடுக்கக்கூடியதாகும்.

இந்த முந்திரி தினமும் 5 சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு சீராகும். அதிக கொலஸ்ட்ரால் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் 4 முதல் 5 முந்திரிப் பருப்பை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கக்கூடிய டிராக்லிஸ்ட் மற்றும் எல்டிஎல் போன்ற கெட்ட கொழுப்பினை குறைத்து எச்டிஎல் என்னும் நல்ல கொழுப்பினை கொழுப்பினை அதிகரிக்க செய்கிறது. கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

தசைகளை வலிமையாக்கும்:

முந்திரிப் பருப்பில் இருக்கக்கூடிய அயன், மெக்னீசியம், காப்பர், சிங்க் போன்ற சத்துக்கள் நல்ல வலிமையான தசைகளை பெற உதவி செய்கிறது. உடலை  நன்கு வலிமையாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க நினைப்பவர்கள் தினமும் 4 முதல் 5 முந்திரிப் பருப்பை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

நரைமுடியை தடுக்கும்:

கூந்தலின் நிறத்திற்கு அடிப்படையாக இருக்கக் கூடிய மெலனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை பெருக்கும்.  இதன் மூலமாக தலை முடி நன்கு கருமையாகவும் இருக்கும், மற்றும் முந்திரிப் பருப்பில் இருக்கக்கூடிய காப்பர் மற்றும் இரும்புச்சத்துக்கள் தலை முடி நன்கு வளர்வதற்கு உதவி செய்கிறது. இவ்வளவு நன்மைகளை தரக் கூடியது என்றாலும் இந்த முந்திரி பருப்பின் அளவாக தான் சாப்பிட வேண்டும்.

தினமும் 4 முதல் 5 பருப்புகளை மட்டுமே சாப்பிட்டு வருவது நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது இதில் இருக்கக்கூடிய ஒரு சில அமிலங்கள் சிலருக்கு தலைவலி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

யாரெல்லாம் இந்த முந்திரிப்பருப்பு சாப்பிடக் கூடாது.?

1. ஒரு சிலருக்கு அலர்ஜி, வயிற்று வலி, லேசான தலை சுற்றல் இதுபோன்று அவதிப்படுபவர்கள் சாப்பிடக்கூடாது.

2.வாய்ப்புண் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

3.கிட்னி மற்றும் பித்தப்பையில் கற்கள் உள்ளதால் அவதிப்படுபவர்கள் இந்த முந்திரிப்பருப்பை சாப்பிடக்கூடாது.

Categories

Tech |