மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையில் கொரோனா காரணமாக ஷீரடியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஷீரடி சாய்பாபா கோயிலில் முன்பதிவு இல்லாமல் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்வின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான சிறப்பு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையை காண்பித்து இலவச டோக்கன் பெறலாம். ஆன்லைன் முன்பதிவு தொடரும் என்பதால் நாள்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் சாய்பாபாவை தரிசிக்கலாம்.