தினமும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் மானை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக புள்ளிமான் ஒன்று தினமும் காலையில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்து செல்கிறது. அந்த புள்ளிமான் வளாகத்தில் அங்கும் இங்கும் ஓடி வருகிறது. இந்நிலையில் அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அருகில் சென்றாலும் அச்சமின்றி புள்ளிமான் சுற்றி திரிகிறது.
பின்னர் மாலை 5 மணிக்கு மேல் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இந்த செய்தி பொது மக்களிடையே வேகமாக பரவியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்து செல்லும் புள்ளி மானை கண்டு ரசிக்கின்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது.