Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.30 முதலீடு செய்தால்… ரூ.4 லட்சம் வருமானம்…. பெண்களுக்கு சூப்பரான பாலிசி…!!!!

இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. காப்பீடு திட்டங்கள் மட்டுமல்லாமல் சேமிப்பு மற்றும் பென்ஷன் போன்ற அனைத்து விஷயங்களிலும் பொது மக்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களை வழங்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு உதவக் கூடிய வகையில் ஆதார் ஷீலா என்ற புதிய திட்டத்தை எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.

இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளும் பயன்பெற முடியும். இதில் எந்தவித ரிஸ்க் கிடையாது. இதில் முதலீடு செய்யக்கூடிய தொகை பாதுகாப்பாக இருக்கும். பாலிசிதாரர் ஒருவேளை உயிரிழந்து விட்டால் இந்த பாலிசியின் பலன்கள் அனைத்தும் அவரது குடும்பத்திற்கு அப்படியே கிடைக்கும். இந்தத் திட்டத்தில் தினந்தோறும் நீங்கள் 30 ரூபாய் முதலீடு செய்தால் உங்களால் 4 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

அதாவது ஒரு நாளைக்கு 30 ரூபாய் என்றால் ஒரு ஆண்டிற்கு மொத்த முதலீடு ரூ.10,950 . இதனைப் போலவே 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களின் முதலீடு மொத்த தொகை ரூ.2,19,000. ஆனால் உங்களுக்கு திரும்ப கிடைக்க கூடிய தொகை ரூ.3,97,000. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச உறுதி படமாக 75 ஆயிரம் மற்றும் அதிகபட்ச உதவிப் பணமாக 3 லட்சம் ரூபாய்வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதிர்வு காலம் 20 ஆண்டுகள் வரை உள்ளது. இது பெண்களுக்கான சிறந்த திட்டம்.

இந்தத் திட்டத்தில் எட்டு வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இணைய முடியும். மேலும் சுகாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கான மருத்துவ சான்றிதழை இதற்கு தேவைப்படும். ஆதார் கார்டு மிகவும் அவசியம். இந்த திட்டத்திற்கான பிரீமியம் தொகையை நீங்கள் ஒவ்வொரு மாதம் அல்லது காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு அடிப்படையில் செலுத்திக் கொள்ளலாம்.

Categories

Tech |