தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முட்டை குடிப்பதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் தினந்தோறும் பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்கின்றனர். அதில் பல உணவுகள் உடலுக்கு நன்மை தரும் வகையிலும், சில உணவுகள் கேடு விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதனை அறியாமல் வாய் ருசிக்கு ஏற்றவாறு உணவுகளை உட்கொள்கிறார்கள். நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கலாம். ஆனால் மக்கள் அதனை அறிவதில்லை.
அதன்படி தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முட்டை குடிப்பதால் உடல் வலுவடையும். பலருக்கும் முட்டை வாடை ஒத்துக் கொள்வதே இல்லை. அதனால் எளிதில் தவிர்க்கிறார்கள். முட்டையில் உள்ள புரதம் வைட்டமின் டி சத்தும் எலும்புகளை உறுதியாக்குவதோடு கண் நோயில் இருந்தும் காக்கிறது. அதனால் தினமும் காலையில் ஒரு முட்டையை பச்சையாகவோ அல்லது உணவாக சமைத்தோ சாப்பிடுங்கள். அது உடலுக்கு நன்மையை விளைவிக்கும்.