Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலை செம்பருத்திப் பூ சாப்பிடுங்க… வியக்க வைக்கும் மருத்துவ குணம்…!!!

தினமும் காலையில் செம்பருத்திப்பூ இதழ்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி செம்பருத்திப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். ரத்தம் சுத்தமாகும். இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

Categories

Tech |