மாதுளம் பழம் சாப்பிட்டால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு. அதை பற்றி இதில் பார்ப்போம்.
மாதுளை இதயத்தை பாதுகாக்கிறது. இது இதயத்துக்கு செல்கின்ற ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு படிவதை தடுகின்றது. இதயம், மூளை இதற்கெல்லாம் ரத்தம் சீராக செல்வதற்கு உதவுகிறது. மாதுளையில் இருக்கிற புர்ட்டோஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும், இயற்கையான ஆஸ்பிரின் ரத்தம் உறைவதைத் தடுக்கறதோடு மட்டுமல்லாமல்,ரத்தத்தோடு அடர்த்தியைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மாதுளையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் இருக்கிற சரும செல்களை உடம்பில் தேவையற்ற புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. மாதுளையில் இருக்கிற ஆண்டி ஆக்சைடு ரத்த வெள்ளை அணுக்களை தூண்டி கிருமிகள், டாசினிகள் உடம்பில் இருந்து வெளியேற்றி வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
மாதுளம் பழத்தை ஜூஸ் ஆண்கள் குடித்து வந்தால் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியும். மாதுளை ஜூஸ் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னையை தடுக்கிறது. ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் உடன் தேன் கலந்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனை சரி ஆகிவிடும். ரத்தசோகை இருக்கிறவங்க மாதுளை சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்கள் அளவு அதிகரிக்கும் மாதுளையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. இதன் இலையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோயின் தீவிரம் குறையும் மாதுளையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு வயசு ஆகுவது தள்ளிப்போகும் இளமை தோற்றம் பாதுகாக்கப்படும்.