கோடைகால பிரச்சனையை தவிர்க்கும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் ஆரஞ்சு பழம் ஒரு சிறந்த மருந்தாகும். எப்படி என்பதை பார்க்கலாம்.
கோடைகாலத்தில் உடலுக்கு நலம் சேர்க்கும் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழமும் ஒன்றாகும். இப்பழத்தில் சுண்ணாம்பு சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இச்சத்து அதிகம் உள்ள பழங்கள் என்றாலே முதலில் கூறுவது ஓரஞ்சு தான். ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பசும் பாலிற்கு சமமானது. இரவு நேரங்களில் சிலருக்கு தூக்கம் வராமல் தவிப்பார்கள்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடித்து வருவது நல்லது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது
அவ்வாறு பிரச்சனை உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் அற்புத மருந்தாக ஆரஞ்சு ஜூஸ் எடுத்து கொள்ளுங்கள். இரவு உணவு உண்ட பின்னாடி ஆரஞ்சு ஜூஸ் அல்லது இரண்டு ஓரஞ்சு பழங்களையோ சாப்பிடுங்கள். பிறகு பாருங்கள் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வரும்.
வயிற்றிலுள்ள செரிக்காத உணவு மற்றும் கழிவுகளை வெளியேற்றி பசியைத் தூண்டும். மலச்சிக்கல் செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு ஆரஞ்சு பழம் ஒரு சிறந்த மருந்தாக செயல்படும். இந்த பழத்தில் வைட்டமின் “சி”, கால்சியம் அதிகம் இருக்கிறது. இது உடலில் உள்ள திசுக்களை புதுப்பிக்கின்றன.
காய்ச்சல் நேரத்தில் காய்ச்சல் விரைவில் குணமாக ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும், மூலநோய், வயிற்றுப்பொருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.