உடலில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் அருமருந்தாக அமையும் முந்திரிப் பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்.
முந்திரி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் சிலருக்கு முந்திரி பழம் பற்றி தெரியாது. அதனை சாப்பிடுவதால் பல நம்பமுடியாத நன்மைகள் நமக்கு கிடைக்கும். முந்திரியை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரி பழத்தை சாப்பிட முடியாது. அதிக அளவில் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும். இதனை சாப்பிடுவதற்கு சில வழிகள் உள்ளது. இதை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளும் ஏராளம். இந்த பழத்தில் புரோட்டீன், பீட்டா கரோட்டின் மற்றும் டானின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளன.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சக்தியை விட இதில் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. ஐந்து ஆரஞ்சு பழத்திற்கு நிகர் ஒரு முந்திரி பழம். நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் அது குணமாகும். அதிலும் குறிப்பாக முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அது அழுகி போய் விடும். அதனை வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நுரையீரல் செயல் பாட்டினை சீராக்க இது மிகவும் உதவுகிறது. ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணம். இதயத்தில் நலத்தைக் காக்க பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்கும். எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட அனைத்து சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. கல்லீரல் உள்ளிட்ட உடல் பாகங்களில் உள்ள நச்சுக் கிருமிகளை அழித்து கழிவுகளை வெளியேற்ற இது உதவுகிறது. செரிமானம் சீராகும்.
உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. புற்றுநோயை தடை செய்ய மிகவும் நல்ல மருந்து. மலச்சிக்கலைத் தடுக்கும். சருமத்தில் உண்டாகும் வீக்கம், அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு ஆகியவற்றை நீக்கும். இந்த பழச் சாற்றினை தலையில் தேய்க்கும் போது பொடுகு உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும். இவ்வாறு பல மருத்துவ குணங்கள் இதில் நிறைந்துள்ளன.