Categories
தேசிய செய்திகள்

தினமும் இரவு 11 – காலை 6 மணி வரை ஊரடங்கு…. ஆந்திர அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.திருமணம் மற்றும் மத ஊர்வலங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 150 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மக்கள் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |