புதிதாக பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் முடக்கப்பட்டது. ஆனால் தொற்று தற்போது குறைந்ததால் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லையிலிருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் சேவையும் ஒன்றாகும். இந்த ரயில் திருநெல்வேலி, ஈரோடு மற்றும் மயிலாடுதுறை இணைப்பு பயணிகள் ரயிலாக இருந்தது. இந்த ரயில் திண்டுக்கல்லுக்கு வந்ததும் ஈரோடு மற்றும் மயிலாப்பூருக்கு தனித்தனியாக பெட்டிகள் பிரிக்கப்பட்டு இயக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நெல்லை-ஈரோடு இடையே ஒரு பயணிகள் ரயிலும், திண்டுக்கல்-மயிலாடுதுறை இடையே ஒரு புதிய பயணிகள் ரயிலும் இயக்கப்படுகிறது. இதனையடுத்து நெல்லை-ஈரோடு பயணிகள் ரயில் காலை 11:12 மணிக்கு திண்டுக்கல்லை வந்தடையும். அதன் பிறகு 11:15 மணிக்கு ஈரோட்டிற்கு கிளம்பும்.
இதில் வரும் மயிலாடுதுறை பயணிகள் திண்டுக்கல்லில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரயிலில் செல்வதற்கு வசதியாக இருக்கிறது. ஏனெனில் மயிலாடுதுறைக்கு திண்டுக்கல்லில் இருந்து காலை 11:30 மணிக்கு ரயில் புறப்படுவதால், 11:12 மணிக்கு வரும் நெல்லை-ஈரோடு ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி 11:30 மணி ரயிலில் செல்வதற்கு வசதியாக இருக்கிறது. இந்த ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இருக்கிறது. இந்த ரயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். மேலும் காலை 11:25 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் ரயில் நெல்லை-ஈரோடு ரயில் வருவதற்கு முன்பாக மாலை 4 மணி அளவில் திண்டுக்கல்லை வந்தடைகிறது.