Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பரபரப்பு!!… . கத்தியால் கழுத்தை அறுத்து “வாலிபர் படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜதானிகோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார், அன்பழகன் ஆகியோருக்கும் இடையே கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ராஜ்குமார் தனது நண்பரான பெருமாள்ராஜா என்பவருடன் அதே பகுதியில் அமைந்துள்ள காளி பகவதி அம்மன் கோவில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மனோஜ்குமார், அன்பழகன் ஆகிய 2 பேரும் ராஜ்குமார் மற்றும் பெருமாள்ராஜாவிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜ்குமாரின் கழுத்தை அறுத்தனர். மேலும் பெருமாள்ராஜாவையும் சரமாரியாக குத்தியுள்ளனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த பெருமாள்ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனோஜ்குமார், அன்பழகன் ஆகிய 2  பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |