Categories
தேசிய செய்திகள்

“திட, திரவ கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளாத பஞ்சாப் அரசு”… தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு…!!!!

திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளாத பஞ்சாப் மாநில அரசுக்கு தேசிய தீர்ப்பாயம் 2000 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஏ கே கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, மாசு கட்டுப்படுத்துவதற்கு விரிவான திட்டத்தை வகுப்பது மாநில அரசின் பொறுப்பு ஆனால் இதனை மாநில அரசு புரிந்து கொள்ளவில்லை. மேலும் நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை இருந்தால் தேவையான வளங்களை திரட்டியும் செலவுகளை குறைத்தும் பொருத்தமான கழிவு மேலாண்மை திட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். கழிவு மேலாண்மை தொடர்பான சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றுவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

ஆனால் மாநில அரசு இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. மேலும் இதனை சரி செய்யும் நடவடிக்கைகளை அதிக காலத்திற்கு தள்ளி போட முடியாது. அந்த வகையில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை சரிவர மேற்கொள்ளாத மாநில அரசிற்கு 2,180 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியிடப்படுவதை தடுக்க தவறியதற்காக மாநில அரசு சார்பில் ஏற்கனவே தீர்ப்பாயத்தில் 100 கோடி வைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மீதமுள்ள ரூபாய் 2,080 கோடி அபராதத்தை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனி வங்கி கணக்கில் மாநில அரசு வரவு வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. மேலும் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை சட்டம் 2016 கீழ் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச சுற்றுச்சூழல் விவகாரங்களை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகின்றது.

Categories

Tech |