ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் ரம்மி, தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் கதாநாயகிகளை மையப்படுத்தி உருவாகி வரும் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
The exciting investigation #ThittamIrandu #PlanB's Teaser Coming Soon #ThittamIranduTeaser@aishu_dil @vinod_offl @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @ECspremkumar @satish_composer #MiniStudio @SixerEnt @Thandora_ @divomovies @digitallynow @proyuvraaj pic.twitter.com/1TYSqV5keJ
— aishwarya rajesh (@aishu_dil) July 20, 2021
சிக்ஸர் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மினி ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் திட்டம் இரண்டு படத்தின் புதிய போஸ்டருடன் அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அட்டகாசமான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.