கனடாவில் ஹோட்டலின் முன்பு வாலிபரை மர்ம நபர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் வான்கூவரில் அமைந்திருக்கும் உணவகத்தின் முன்பு ஹர்பிரீத் சிங் தலிவால் என்ற வாலிபர் நின்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக உணவகத்தின் வாசல் முன்பு நின்ற அவரை மர்ம நபர் சுட்டுக்கொன்றனர். கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கூறியதாவது, மர்ம நபர்கள் திட்டமிட்டு அவரை குறி வைத்து சுட்டுக் கொன்றதாக கூறியுள்ளார். மேலும் வான்கூவர் பகுதியில் இதுவரை நடைபெற்றதில் இது 5 ஆவது சம்பவம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.