Categories
தேசிய செய்திகள்

திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கட்டாயம் நடக்கும்… எடியூரப்பா அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதன் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில், தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. ஜூலை 19ஆம் தேதி முக்கிய பாடங்களுக்கும், ஜூலை 22ஆம் தேதி மொழி பாடங்களுக்கும், காலை 10:30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார். ஒரு அறைக்கு 12 மாணவர்கள் வீதம், 73,066 அறைகளில் 8.76 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இந்நிலையில் இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடர்பாக பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்தது. இருப்பினும் திட்டமிட்டபடி ஜூலை 19 மற்றும் 22 தேதிகளில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |