சீனாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு சீனாவின் ஹாங்காங் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 36 பேர் மாயமானதாகவும் சீன அரசு ஊடகம் கூறியுள்ளது. புதன்கிழமை இரவு திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றின் திசை மாறியதாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்திருக்கின்றது. அதாவது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 1500 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள 6000 மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் டத்தோங் பகுதியில் மலையாறு பேரழிவு ஏற்படுத்தியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் சீனாவில் கோடை காலத்தில் வெள்ள பேரழிவுகளையும் நாட்டின் பிற பகுதிகளில் கடுமையான வெப்பம் மற்றும் வளர்ச்சியையும் எதிர்கொள்கின்றது. கடந்த 60 வருடங்களுக்கு முன் வெப்பம் மற்றும் வறட்சியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என மாநில ஊடகங்கள் விவரித்து இருக்கின்றது.