Categories
மாநில செய்திகள்

திடீர் பெண் சாமியாருக்கு ஒரே நாளில் அதிர்ச்சி…. ஆட்டைய போட்டது யாருப்பா…!!!

மக்களிடையே கலி முற்றியதால் அதை விரட்ட ஒரு ஒளியாக வந்துள்ளேன் எனக்கூறி தமிழகத்தில் # ஆதி_ பராசக்தி_  அம்மா உருவெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான அன்னபூரணி 2021 ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம் எடுத்துள்ளார்.

அவர்கள் கணவனை விட்டு  பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. இவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த பராசக்தி செங்கல்பட்டில் திவ்ய தரிசனம் தருகிறார் என்று செய்திகள் உலா வரும் நிலையில் அதே பெண்மணி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மதுராந்தகம் அருகே தாதங்குப்பத்தில் சாமியார் என்று கூறிக்கொள்ளும் அண்ணபூரணி அமைத்திருந்த அவரது கணவர் சிலை திடீர் மாயமாகியுள்ளது. காரில் வந்த கும்பல் சிலையை எடுத்துச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த  சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |