தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதையடுத்து தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன் முன்னிலை விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திடீர் திருப்பமாக 100 இடங்களுக்கு மேல் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. 144 இடங்கள் வரை முன்னிலையில் இருந்த திமுக திடீர் திருப்பமாக 10 இடங்கள் பின்னடைவை சந்தித்து 130 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.