Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்… பரபரப்பை கிளப்பிய பிரபல தமிழ் நடிகரின் மனைவி…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட நடிகர் விமல் மனைவி பிரியதர்ஷினி விருப்ப மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

அது மட்டுமன்றி அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒவ்வொரு கட்சியினரும் விருப்ப மனு பெற்று வருகிறார்கள். அதன்படி சிலரும் தங்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் களவாணி படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இதனையடுத்து விமலும் அவரது மனைவி பிரியதர்ஷினியும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

Categories

Tech |