Categories
உலக செய்திகள்

திடீர் தாக்குதல் நடத்திய லெபனான்… பதிலடி கொடுத்த பிரபல நாடு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இஸ்ரேல் மீது லெபனான் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு படை பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு படை, இஸ்ரேலை நோக்கி லெபனானில் இருந்து 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும் அதில் ஒன்று லெபனான் எல்லையை தாண்டி வரவில்லை எனவும், மற்ற இரண்டு ராக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் தாக்கியது என்றும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் லெபனானின் எல்லைக்கு அருகே இஸ்ரேலின் Tel-Hai , Kfar Giladi , Qiryat Shemona உள்ளிட்ட பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த தாக்குதலில் சேதங்கள் மற்றும் காயங்கள் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு படை லெபனானை நோக்கி பீரங்கி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் interim படை இரு தரப்பினருடனும் தலைமை மற்றும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் Stefano Del Col பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |