தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் கடைகளில் சோதனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார், சுகாதார ஆய்வாளர் குருசாமி உள்பட சில அதிகாரிகள் ஆர்.சி தெரு மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் இருக்கும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் போது ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 500 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் பதுக்கி வைத்திருந்த நபருக்கு ரூபாய் 2,500 அபராதம் விதித்தனர்.