கோலியை ஒருவர் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தனது சொந்த அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா.
இந்திய அணியின் விராட் கோலி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தனது வசமாக்கிய ஒரு வீரர்.. இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.. இந்நிலையில் விராட்கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரையில் 70 சதங்கள் விளாசியுள்ளார்..கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி சதம் அடித்துள்ளார்.. கடைசியாக சதம் அடித்ததற்கு பின் அவர் 24 அரை சதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக விராட் கோலி இந்த ஆண்டில் 94 ரன்கள் அடித்துள்ளார்..விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சதங்களை விளாசாமல் இருப்பது அவர் மீது விமர்சனங்களை எழ செய்கிறது.
மேலும் ஐசிசி டி 20 ஐ தரவரிசையில் 34 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.அது மட்டும் இல்லாமல் நடந்து முடிந்த பல தொடர்களில் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார். இது அனைவரது மத்தியிலும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விராட் கோலி தனது ஆட்டத்தை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.. இதனை நிரூபிக்க ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் தனது பழைய சிறப்பான ஆட்டத்தை ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
விராட் கோலியின் ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில் விராட் கோலி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா ஆசிய கோப்பை அணிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ஆசிய கோப்பையில் விராட் கோலியை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆம், அவர் ரன்களை எடுக்க சிரமப்படுவதால் அவர் ஃபார்மில் இல்லை, ஆனால் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர் விராட் கோலி, அவர் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வரலாம்” என்று தெரிவித்துள்ளார்.
கோஹ்லி பாகிஸ்தானுக்கு எதிராக 2021 உலகக் கோப்பையில் ஒரு முனையில் நின்று போராடினார். டாப் ஆர்டர்கள் சரிந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் அரை சதம் இல்லையென்றால், இந்தியாவால் 151 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியிருக்க முடியாது. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஷாஹீன் ஷா அப்ரிடி. தற்போது காயத்தால் ஆசிய கோப்பையில் இருந்து ஷாஹீன் ஷா அப்ரிடி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Yasir Shah warns the Pakistan team not to take Virat Kohli lightly in Asia Cup 2022.#INDvPAK pic.twitter.com/MciwOx2sDH
— Naveen Cricketer (@NaveenSingle12) August 21, 2022