இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அண்ணன், தம்பி இருவரும் படுகாயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அக்பர் அலி. இவருடைய தம்பி முகம்மது மூசா. இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தோகமலை அருகிலுள்ள குருணி குளத்துட்டியில் இருக்கும் அக்பர் அலியின் மனைவியை பார்த்துவிட்டு திரும்பி சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மொட்டை காமநாயக்கனூர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்தது.
இதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தோகமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.