காட்டு யானை சுற்றுலா பயணிகளின் காரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று மாலை சுற்றுலா பயணிகளின் கார் இந்த சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று நடந்து சென்றது. இதனை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் காரை சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டனர்.
ஆனாலும் அந்த காட்டு யானை வேகமாக ஓடிவந்து காரின் முன்பகுதியை துதிக்கையால் தாக்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் காரை பின் நோக்கி வேகமாக இயக்கி உயிர் தப்பினர். சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டு காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.