Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“லாக்டவுன்” குழந்தை எங்கே….? பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் பரபரப்பு…!!

திடீரென மாயமான 1/2 வயது ஆண் குழந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் காந்திநகர் தாலுகா அலுவலகம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் தனது மனைவி புத்தினி குழந்தைகள் ஆகாஷ், பிரகாஷ், துர்கி மற்றும் 1 1/2 வயது குழந்தையான லாக்டவுன் ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த குழந்தை கொரோனா உரடங்கு சமயத்தில் பிறந்ததால் அதற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் மதிய வேளையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேர் திடீரென வெளியூருக்கு சென்றதால் அவர்கள் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்களின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது அவர்கள் குழந்தையை கடத்தி செல்லவில்லை என்பது உறுதியானது. இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் பகுதிக்கு அருகில் அம்பத்தூர் ஏரி இருப்பதால் குழந்தை தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குழந்தையை யாரேனும் கடத்திச் சென்றனரா? குழந்தை எங்கு மாயமானது? என்று காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |