Categories
உலக செய்திகள்

திடீரென மயமான 16வயது சிறுமி…. கண்டுபிடிக்க போலீஸ் எடுத்த முடிவு…. வெளியான புது தகவல்…!!

கனடாவின் திடீரென மாயமான 16 வயது சிறுமியின் விவரங்கள் மற்றும் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கனடாவில் உள்ள லாங்போர்டு பகுதியை சேர்ந்த சிறுமி மெக்கன்சி சவுர்சின் (16 வயது). இவர் கடந்த வாரம் திடீரென காணாமல் போயுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை  இவரின் தற்போதைய நிலை என்ன? என்பது தெரியாமல் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில்  அந்த சிறுமி வான்கூவரிலிருந்து அல்பர்டாவின் எட்மண்டன் இடையே பயணம் மேற்கொண்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

எனவே காணாமல் போன சிறுமியை விரைவில் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் புகைப்படத்தையும், அவரின் விவரங்களையும் வெளியிட்டுள்ளனர். அதில் காணாமல் போன சிறுமியின் உயரம் 5 அடி 3 அங்குலம் எனவும், எடை 123 பவுண்ட் எனவும், அவரின் வயது 16 எனவும் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் இவரைப்பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனே காவல்துறையை அணுகவும் என்றும் அதில் குறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |