Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயமான கார்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்….. போலீஸ் அதிரடி….!!

கார் திருடிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  மாக்கினாம்பட்டி திருவள்ளூவர் காலனியில் கார்த்திகேயன்(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் தனது உறவினரான தாமோதரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் காரை நிறுத்தியுள்ளார்.

அந்த கார் திடீரென மாயமானதை கண்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பீளமேட்டில் வசிக்கும் விஜய் என்பவரை கைது செய்து காரை பத்திரமாக மீட்டனர்.

Categories

Tech |