Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திடீரென மயங்கி விழுந்த வாலிபர்” உறவினர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்செந்தூரை சேர்ந்த மோகன் என்பவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் கடந்த 23-ஆம் தேதி நிறுவனத்தில் வைத்து திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மோகனின் உறவினர்கள் நிறுவனத்தின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறந்த மோகனின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என கூறி ஸ்ரீவைகுண்டம் அருந்தியர் காலனி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உதவி ஆட்சியர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால்  மோகனின் உறவினர்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும்  தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |