Categories
தேசிய செய்திகள்

“திடீரென போராட்டக்காரர்களிடம் சிக்கிய பள்ளி வேன்”…. பயத்தில் கதறி அழுத சிறுவன்…. வைரல் வீடியோ….!!!!

பீகார் மாநிலம் டர்பங்கா என்ற மாவட்டத்தில் அக்னிபாத் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாலை பள்ளியிலிருந்து மாணவ மாணவிகளை அடைத்துக்கொண்டு திரும்பிய வேன் ஒன்று போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கியது. அதனால் வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். வன்முறையாளர்கள் சிலர் பள்ளி வேன் மீது கற்களை வீசினர். அதனால் அப்பகுதியை பதற்றமான சூழ்நிலை ஆக மாறியது.

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் நெருங்கியதால், பள்ளி வேன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் வேனில் பள்ளி சீருடையில் இருந்த ஒரு சிறுவன் பயத்தில் கதறி அழுதான்.அந்த சிறுவனுடன் இருந்த சக பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பதற்றம் அடைந்தனர்.அதன்பிறகு போராட்டக்காரர்கள் சிறிது நேரத்தில் அந்த பகுதியை விட்டு சென்றனர் . அதனால் அந்த சிறுவன் ஆறுதல் அடைந்தான். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |